நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ. 85 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமெரிக்காவில் பணியாற்றி வந்த பொறியாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரிடம் இருந்து ரூ.85 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வீமடு நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலகம் எதிரே, ஜெகநாதன் தெருவில் உள்ளது. அண்மையில் இவரது மகளுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக இன்று அதிகாலை அவரது வீட்டினுள் சென்று தொடர் சோதனையில் ஈடுபட்டனத்தில், அதில், கணக்கில் வராத 85 லட்சம் ரூபாய் பணம் சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணமானது வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்டதா அல்லது வாக்காளர்களுக்கு வழங்கும் வகையில் அரசியல் கட்சியினரால் பதுக்கப்பட்டதா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.