சென்னை,

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் மீண்டும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் 7-ம் தேதி, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்

அப்போது,. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிமுக எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன்,  நடிகர் சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது, அதைத்தொடர்ந்து அவரது மனைவியை விசாரணைக்கு அழைத்தனர்.

ஐடி ரெய்டு நடந்து  ஒரு மாதமாக ஆகியும் அவர் மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை. விசாரணையில் எந்தவித  முன்னேற்றமும் இல்லாத நிலையில், ரெய்டு நடத்தப்பட்டதன் நோக்கம் என்ன, அதிமுகவை மிரட்டவா அல்லது வேறு ஏதேனும்  காரணமா என்ன  என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இன்று திடீரென புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்,.

ஏற்கெனவே நடைபெற்ற சோதனையின் போது ஒரு அறையை பூட்டி சீல் வைத்துவிட்டு சென்றனர். தற்போது பூட்டிக்கிடக்கும் அந்த அறையில் சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள், நகைகள் சரிப்பார்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.