அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டிபோட்டு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருகின்றன.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் இணை நிறுவனர் டஸ்டின் மாஸ்கோவிச் ஹிலாரி கிளிண்டனின் குடியரசுக் கட்சிக்கு நிதியாக சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை வாரிக் கொடுத்துள்ளார். இவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப்பை “ஆபத்தான பிரிவினைவாதி” என்றும், குடியரசு கட்சி வேட்பாளாரான ஹிலாரி கிளிண்டனை தொலைநோக்கு கொண்ட நேர்மறையான நடைமுறைவாதி என்றும் வர்ணித்துள்ளார்.
ஆரக்கிள் நிறுவனர் லாரி எல்லிசன் ஜனநாயகக் கட்சிக்கு 5 மில்லியன் டாலர்களைக் கொடுத்துள்ளார். பேப்பால் நிறுவனத்தின் இணை நிறுவனர் பேட்டர் தியல் தனது நிதி மூலம் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹெச்.பி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மெக் ஒயிட்மென் ஹிலாரிக்கு நிதி உதவி செய்திருக்கிறார்.
இந்தப் போட்டியிலும் இதுவரை ஹிலாரியின் கையே ஓங்கியிருக்கிறது. ஹிலாரி, ட்ரம்ப் இருவரும் இப்போது வட கரோலினாவில் நிதி திரட்டும் பணியில் மும்மரமாக ஈடுபட்ட்டுள்ளனர்