மும்பை: மைதானத்தில் இறங்கி பயிற்சியில் ஈடுபட முடியாமல் இருப்பது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு கடினமான காலகட்டம்தான் என்றுள்ளார் இந்திய அணியின் முன்னாள் உடற்தகுதி பயிற்சியாளர் சங்கர் பாசு.
தற்போதைய இக்கட்டான நிலையில், விளையாட்டு வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பலர் வீடுகளில் மற்றும் ஜிம்மில் பயிற்சி செய்கின்றனர்.
பேட்ஸ்மென்களைப் பொறுத்தவரை பெரியளவில் சிக்கல் இல்லைதான். ஆனால், என்னதான் பயிற்சியில் ஈடுபட்டபோதும், மைதானப் பழக்கம் தடைபடுவதால், எதிர்காலத்தில் மீண்டும் போட்டிகள் துவங்கும்போது, அவர்கள் மைதானத்தில் ஓடிவந்து செயல்படத் துவங்கும்போது அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படலாம்.
ஏனெனில், வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை, மைதானத்தில் இறங்கி செயல்படுவது போன்று எதுவும் அமையாது. வீட்டிலேயே ‘டிரட் மில்’ ஓட்டத்தில் ஈடுபட்டாலும்கூட சரியாக வராது. அதேசமயம், உணவு மற்றும் தூங்கும் விஷயத்தில் சரியான திட்டமிடல் அவசியம்” என்றார் அவர்.