புதுடெல்லி: சமையல் வேலைகளையும், இதர வீட்டு வேலைகளையும் செய்வது சற்று சிரமமாகவே உள்ளதாகவும், ஆனால் தன் குடும்பத்திற்காக செய்வது பிடித்திருக்கிறது என்றும் கூறுகிறார் பிரபல குத்துச்சண்டை நட்சத்திரம் மேரிகோம்.
மத்திய டெல்லி பகுதியில் வசித்து வருகிறார் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 6 தங்கப் பதக்கங்கள் வென்ற 37 வயதான, மணிப்பூரை பூர்வீகமாகக் கொண்ட மேரிகோம்!
தற்போதைய ஊரடங்கால், இவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். அவர் கூறியதாவது, “வீட்டிலேயே இருப்பது கடினமான காலம்தான். நான் பெரிதாக எதையும் சமைப்பதில்லை. ரொட்டி, பூரி மற்றும் ‘பாஸ்தா’ உணவுகளையும் குடும்பத்திற்காக சமைக்கிறேன்.
என் குழந்தைகளுக்கு அவை பிடிக்கின்றன. மற்றபடி, சாதாரண வீட்டு வேலைகளை செய்கிறேன். அடிக்கடி ஷாப்பிங் செல்ல முடியாதது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனாலும், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிவதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது” என்றுள்ளார்.