டெல்லி: என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை என உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹிஜாப் குறித்து பிரியங்கா காந்தி இன்று வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், அது பிகினி, கூங்காட், ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் எதுவாக இருந்தாலும், அவள் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளார்.