லாஸ் ஏஞ்சல்ஸ்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ன் ஒலிம்பிக் போட்டிகள் நிகழும் என அந்நகரத்தின் மேயர் அறிவித்துள்ளார்.
நான்கு ஒரு முறை நடக்கும் விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். இதை நிகழ்த்த ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு வருகிறது. தற்போது 2020ல் ஜப்பானில் உள்ள டோக்யோ நகரில் நடைபெற உள்ளது. அதன் பிறகு 2024ல் பாரிசிலும், 2028ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடைபெறப்போகிறது.
லாஸ் ஏஞ்சலஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில்தான் முதலில் பாரிசுடன் போட்டியில் இருந்தது. மற்ற நகரங்களுக்கு நடத்த ஆசை இருந்தாலும் இந்த நகரங்களிடையே போட்டியிட்டு நடத்தும் அளவுக்கு செலவு செய்யமுடியுமா என்னும் அச்சமும் இருந்தது.
பாரிஸ் நகரம் இந்த போட்டியை நடத்த விரும்பியதற்கான முக்கிய காரணம் 1924 ஒலிம்பிக்கின் நூற்றாண்டு விழாவாக 2024 அமையும் என்னும் காரணமே.
தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆலோசனைப்படி 2024ல் ஒலிம்பிக் போட்டிகளை பாரிசில் நடத்தவும், 2028ல் தாங்கள் நடத்தவும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
விரைவில் இதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.