டில்லி

வறான தகவல்களை அளிக்கும் மாதச் சம்பளதாரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

வருமான வரி ஏய்ப்பு பல துறைகளிலும் நடப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.   சமீபத்தில் பெங்களுருவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.   அப்போது வருமான வரி ஆலோசகர் உதவிட்யுடன் தவறான தகவல்களுடன் வரிக்கணக்கு தாக்கல்செய்யப்பட்டு வரி மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.    இது குறித்து ச்பிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், “வருமான வரி ஆதாயங்களை பெற்று தருவதாகக் கூறி தவறான கணக்கை அளிக்குமாறு பல வருமான வரி  ஆலோசகர்கள் ஆலோசனை கூறி வருவதாக தெரிய வந்துள்ளது.   பொதுமக்கள் அவர்கள் வலையில் விழ வேண்டாம்.  மாத சம்பளக்காரர்கள் வருமானத்தை குறைத்துக் காட்டுதல், பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை அதிகரித்து காட்டுதல் உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.   அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.   மேலும் இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.  இவ்வாறு முறைகேடுகள் செய்வோரைக் கண்டறிய தானியங்கி அமைப்பு மூலம் கணக்குகள் சோதிக்கப் பட உள்ளன.   அத்துடன் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டால் அவ்வாறு முறைகேடு செய்பவர்களும் அவர்களுடைய வருமான வரி ஆலோசகர்களும் கடும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்”  என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.