டெல்லி: வாரத்தில் 4 நாட்கள் வேலைக்கு மாற ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஆனால் ஆனால் பணி நேரம் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒர்க் ப்ரம் ஹோம் எனப்படும், வீட்டிலிருந்த பணி செய்யும் நடைமுறை உருவாகி உள்ளது. இதனால், மென்பொருள் நிறுவனம் உள்பட டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தும் பல தொழில்களும், ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள். தற்போது வாரத்திற்கு 5 நாட்கள் பணியாற்றி வரும், ஐடி நிறுவன ஊழியர்கள் குறைந்த பட்சம் 10 மணி நேரம் முதல் 16மணி நேரம் வரை தினசரி உழைக்கிறார்கள்.
தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், பல ஐடி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. பல நிறுவனங்களில் முக்கிய ஊழியர்களை வேலைக்கு வரழைத்து, பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் முழு அளவில் ஐடி நிறுவனங்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் பணி வழங்கப்படும் வகையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐடி நிறுவனத்தின் உள் கணக்கெடுப்பில் 80% ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் நீண்ட நேரம் வேலை செய்யத் தயாராக இருப்பதைக் காட்டியுள்ளனர். ஆனால், வேலை நேரம் இரு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு ஐடி நிறுவன ஊழியர்கள் தயாராக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாரத்தில் 4 நாட்கள் பணி, 3 நாட்கள் விடுமுறை என்பதை வரவேற்கும் ஐடி நிறுவன ஊழியர்கள், வாரத்தில் 4 நாட்கள் நீண்ட நேரம் வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் நீண்ட வார இறுதி நாட்களில் அவர்களின் தனிப்பட்ட கடமைகள் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், ஊழியர்களின் எதிர்காலம், கல்வி குறித்து முடிவு எடுக்க முடியும், அதற்கான நேரத்தை ஒதுக்க முடியும் பல ஊழியர்கள் நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட டிஏசி செக்யூரிட்டி பார்ச்சூன், ‘வேலையின் எதிர்காலத்தை’ மாற்றியமைப்பதற்கான ஒரு படியாக இது அமையும் என்றும், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் பதிலுக்கு மகிழ்ச்சியான பணியாளர்களைப் பெற ஊழியர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்த நிறுவனத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சிறந்த உற்பத்தித்திறனுக்காக கடந்த 7 மாதங்களாக வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டு வருவதாகவும்,. இது தொழிலாளர்களை அதிக உற்பத்தி மற்றும் மகிழ்ச்சியாக மாற்றினால், அது மும்பை அலுவலகத்தில் இதை நிரந்தரமாக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அதிகபட்ச உற்பத்தித்திறனை உறுதி செய்வதற்கு முற்றிலும் தானியங்கி செயல்முறை கொண்ட நிறுவனம் வேலை செய்யும், இது ஊழியர்கள் பணி நேரத்திற்கு வெளியே சக ஊழியர்களை அணுகாமல் இருப்பதை உறுதி செய்யும்.
டிஏசி செக்யூரிட்டி பார்ச்சூன் 500 நிறுவனங்களைப் பாதுகாக்கும் பாதிப்பு மேலாண்மையில் உலகளாவிய தலைவராக உள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பாதிப்பு மேலாண்மை மேடை ESOF (ஒரு கட்டமைப்பில் நிறுவன பாதுகாப்பு) மூலம் 5 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகளை நிர்வகிக்கிறது.
காலத்திற்கேற்றாற்போல் மாற்றத்தை எதிர்நோக்கும் மென்பொறியாளர்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமையும் என்று சில நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது.