டில்லி

ற்போது ஊரடங்கால் நடப்பது போல் வீட்டில் இருந்து பணி என்பதை நிரந்தரமாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வுருகின்றன.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஒரே இடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என ஆலோசனை அளிக்கப்பட்டது.   அதன் அடிப்படையில் பல அலுவலகங்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவன அலுவல்கங்க்ள் வீட்டில் இருந்து பணி என்னும் முறையை 50% தொழிலாளர்களுக்கு அறிவித்தது  அதன் பிறகு நாடெங்கும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மேலும் பல பணியாளர்கள் வீட்டில் இருந்து பணி  புரியத் தொடக்கினர்.

இந்த முறை மிகவும் பலன் அளிப்பதாகப் பல நிறுவனங்கள் கருதி உளனன.   எனவே இந்த  வீட்டில் இருந்து பணி என்னும் நடைமுறையை நிரந்தரமாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிகை விடுத்து இது குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன.    மேலும் இதை நிரந்தரமாக்கத் தொழிலாளர் சட்டத்தில் சில மாறுதல்கள் செய்வது குறித்தும் அரசுக்கு இந்நிறுவனங்கள் ஒரு அறிக்கை அளிக்க உள்ளன.

அந்த அறிக்கையில் பணி நேரம் மற்றும் ஷிஃப்ட் நேரகக்ளை மாற்ற பரிந்துரை அளிக்கப்பட உள்ளன.  அத்துடன் வீட்டில் இருந்து பணி புரியும் ஊழியர் ஒரே நேரத்தில்2 அல்லது 3 நிறுவனங்களில் கூட பணி புரிய வாய்ப்பு உளது.  ஆகவே அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கு பதிலாக தேசிய ஓய்வூதிய திட்டத்தின்  மூலம் தொகை வழங்கலாம் எனவும் அப்படிச் செய்யும் போது அந்த செலவை நிறுவனக் கணக்கில் எழுத  அனுமதிக்கலாம் எனவும் யோசனை அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து டி சி எஸ் நிறுவனம் இந்த கோரிக்கைகள் நடைமுறை படுத்தபடால் ஊழியர்களில் 75% பேரை வீட்டில் இருந்து பணி செய்ய அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது இதைப் போல் டெக் மகேந்திரா நிறுவனம் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு முதல் கட்டமாக சுமார் 25% ஊழிய்ர்க்ளை வீட்டில் இருந்து பணி புரிய உத்தரவிட தயாராக உள்ளது.

மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால்  ஒரே அலுவலகத்தில் 10000 பேர் பணி புரிவதற்குப் பதில் 500 பேர் பணி புரிந்து மீதமுள்ளோர் வீட்டில் இருந்து பணி புரிய வாய்ப்பு கிடைக்கும்.   இது பல நிறுவனங்களின் நிர்வாகச் செலவைக் குறைக்க உதவும் என எதிர்பார்ப்பு உள்ளது.   இதனால் பலர் பணி நீக்கம் செய்யப்படுவது குறையும் எனவும் கூறப்படுகிறது.