வாஷிங்டன்: 2019 – 20 மற்றும் 2010 – 21 நிதியாண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடு குறித்து விமர்சித்துள்ள ஐ.எம்.எஃப். அமைப்பின் முதன்மை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான கணிதம் மற்றும் புள்ளியியல் நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “தனது ஜி.டி.பி. தொடர்பாக இந்தியா மதிப்பிடும் வழிமுறைகளில் இன்னும் சில சிக்கல்கள் உள்ளன. எனவே, இந்த தகவல்கள் குறித்து, ஐ.எம்.எஃப். அமைப்பு கூர்ந்து கவனித்து வருகிறது.
இந்தியாவிலிருக்கும் எங்களின் சக ஊழியர்களுடன் இதுகுறித்து பேசி வருகிறோம். இதனடிப்படையில் இறுதியாக, எங்களின் முடிவை மேற்கொள்வோம்.
கடந்த 2015ம் ஆண்டு ஜி.டி.பி. கணக்கிடுவதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் வரவேற்கத்தக்கது. உண்மையான ஜி.டி.பி. மதிப்பிடுவதில் பயன்படுத்தப்படும் பணவாட்டக் காரணி கவலைக்குரியது” என்றுள்ளார்.
– மதுரை மாயாண்டி