ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி உள்பட நடிகர் நடிகைகள் வாக்குப்பதிவு…

Must read

ஐதராபாத்:

ந்திராவில் இன்று பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலையிலேயே வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்த ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வாக்களித்தார்.

வாக்களித்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர்

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  முதல் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் 91 நாடாளுமன்ற தொகுதிகளிலும்,  ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

பல இடங்களில் காலை முதலே வாக்குச்சாவடியில் திரண்ட பொதுமக்கள் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது உரிமையை நிலைநாட்டி செல்கின்றனர்.

ஜெகன்மோகன் ரெட்டி வாக்களிக்க வந்த காட்சி

ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதே போல மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதியில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

குப்பம் தொகுதியில் போட்டியிடும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகன் நாரா லோகேஷ், மனைவி நாரா புவனேஷ்வரி உட்பட குடும்பத்தினருடன் அமராவதியில் வாக்களித்தார்.

ரோஜா வாக்களித்தார்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

சிரஞ்சீவி குடும்பத்தினர் வாக்களித்தனர்

ஆந்திரா: நகரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகை ரோஜா.

ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி தனது மனைவி மகன் உள்பட குடும்பத்தினருடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ஐதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர் அல்லுஅர்ஜுன்

More articles

Latest article