பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்ய அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக  நிலவில் இறங்கி உள்ளது. இதுதொடர்பான இஸ்ரோவின் யுடியூப் வீடியோ பக்கம் உலக சாதனை படைத்துள்ளது. மேலும், நிலவில் இறங்கியுள்ள பிரக்யான் ரோவர் குறித்த தகவல்கள் விரைவில்.. என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சந்திரயான்3 விண்கலம்  இந்தியாவில் தயாரிக்கப்பட்டது சந்திரனுக்காக உருவாக்கப்பட்டது🌖!Ch-3 ரோவர் லேண்டரில் இருந்து கீழே இறங்கியது இந்தியா நிலவில் நடைபயணம் செய்தது ! மேலும் புதுப்பிப்புகள் விரைவில் என  இஸ்ரோ பதிவிட்டுள்ளது.

சந்த்ரயான் 3 – விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதை இஸ்ரோ யூ ட்யூப் சானலில் மட்டும் 6 மில்லியன்+ (6 கோடிக்கும் அதிகம்) பேர் பார்த்துள்ளனர். இது ஒரு உலக சாதனை என்றும் தெரிவித்துள்ளது.

Chandrayaan3 live stream breaks World record of Spanish streamer Ibai of 3.4 million viewers. At present more than 46 million people are watching Chandrayaan3 Landing on ISRO’s official YouTube channel. The most watched ‘Space Event’ in the history of Mankind is Loading.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி  ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை தொடங்கிய நிலையில் சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும்  நிலவை சுற்றி வந்தநிலையில் வெற்றிகரமாக நிலவில் இறங்கி  வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறகிய உலகின் முதல் நாடாகவும் , நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை  பெற்றுள்ளது.

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, நிலவுக்காக தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 லேண்டரில் இருந்து சாய்தளப் பாதை வழியாக பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. இந்தியா நிலவில் நடைபயில்கிறது! அடுத்தடுத்த தகவல்கள் விரைவில்.. ” என்று தெரிவித்துள்ளது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து  ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் இஸ்ரோ ரோவரின் செயல்பாடு குறித்து ட்வீட் செய்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டது சந்திரனுக்காக உருவாக்கப்பட்டது !Ch-3 ரோவர் லேண்டரில் இருந்து கீழே இறங்கியது இந்தியா நிலவில் நடைபயணம் செய்தது ! மேலும் புதுப்பிப்புகள் விரைவில் என பதிவிட்டுள்ளது.

நிலவில் லேண்டர் தரையிறங்கியதும், பிரக்யான் ரோவர் உலா வரத் தொடங்கியதும்  14 நாட்கள் ரோவர் பல குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. நிலவின் மேற்பரப்பில் உள்ள கணிமங்கள், வாயுக்கள், பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதுபோல் நிலாவில் நிலாநடுக்கம் ஏற்படுகிறதா? என்பன போல் பல்வேறு ஆய்வுகளையும் ரோவர் மேற்கொள்ளவிருக்கிறது.

சந்திரயான் கலங்களில் உள்ள மின்னணுக் கருவிகள் அந்தக் கடும் குளிரைத் தாங்காது. எனவே, நிலவின் பகல் பொழுதில் மட்டுமே கருவிகள் செயல்படும். அதன் பின்னர் தரையிறங்கிக் கலம், உலாவிக் கலம் ஆகியவற்றின் ஆயுள் முடிந்துவிடும். நிலவின் ஒரு நாள் என்பது 14 பூமி நாள்களுக்குச் சமம். எனவே, தரையிறங்கிக் கலம், உலாவிக் கலத்தின் ஆயுள் 14 நாள்கள்.

ரோவர் நிலாவில் உலாவரத் தொடங்கியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாடினர். இதன் மூலம் சந்திராயன்-3 மிஷன் பூரண வெற்றி பெற்றுள்ளது.