மகேந்திரகிரி: தமிழகத்தின் தேவைக்காக இஸ்ரோ மையம், அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைத்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திர மலையில் உள்ள இஸ்ரோ மையத்தில் தயாரிக்கப்படும் மருத்துவ ஆக்சிஜன், டேங்கர் லாரி மூலம் சென்னையில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்து, தேவையின் அடிப்படையில், அந்த நிறுவனத்தினர், சென்னையில் உள்ள பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரம் டன் எடை கொண்ட 14 ஆயிரம் கன லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், இனி வாரத்திற்கு ஒரு முறை ஒரு டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் அனுப்பப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.