சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து  தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இது தமிழ்நாடு அரசுமீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறையினரின் நடவடிக்கைகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, மற்றும் கிருஷ்ணகிரி, நெல்லை, பாளையங்கோட்டை, திருப்பூர், உடன்குடி என பல பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம் மக்களிடையே பெரும் அச்சத்தையும், ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

இதையடுத்து,   பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில்   நேற்று (புதன்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை உடனடியாக அழைத்து புகார் அளிக்குமாறு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மேலும்,   இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதியத் திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, மேலும்  புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்ள உயர் கல்வி மன்றம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக  இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் பன்னீர்செல்வம்,

இஸ்ரோ விஞ்ஞானி  வீரமுத்துவேல்,

தனியார் தொழில்நுட்ப நிறுவன CEO முரளிதரன்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர்  சந்திரசேகர்,

ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.