டெல்லி: இஸ்ரோவின் ‘சுக்ரயான்’ திட்டம் 2031-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா பிரச்சினை காரணமாக சுக்ரயான் செயற்கைகோள் திட்டம் 2025-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ஏராளமான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய நிலையில், முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான் செயற்கைகோளை அனுப்ப உள்ளது.
பூமியை சுற்றி வரும் வெள்ளி கிரகம் 19 மாதங்களுக்கு ஒருமுறை பூமிக்கு நெருக்கமாக வருகிறது. அதன் அடிப்படையில் இஸ்ரோவின் வீனஸ்மிஷன், ‘சுக்ரயான்-1’ திட்டம் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக சுக்ரயான் செயற்கைகோள் திட்டம் 2025-ம் ஆண்டு டிசம்பருக்கு தள்ளி போனது. இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் 2025-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்றும், எனவே இந்த திட்டத்தை 2031-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ பேராசிரியரும், விண்வெளி அறிவியல் திட்டத்தின் ஆலோசகருமான ஸ்ரீகுமார் கூறுகையில், வீனஸ் மிஷன் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறவில்லை. இதன் காரணமாக இந்த திட்டம் 2031-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகளும் வீனஸ் பயணங்களை 2031-ம் ஆண்டுக்கு திட்டமிட்டுள்ளன என்றார்.
இஸ்ரோவின் வீனஸ் மிஷன், சுக்ராயன் I எனப்படும், டிசம்பர் 2024 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த யோசனை 2012 இல் பிறந்தது; ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2017-2018 பட்ஜெட்டில் விண்வெளித் துறை 23% உயர்வு பெற்ற பிறகு, இஸ்ரோ ஆரம்ப ஆய்வுகளைத் தொடங்கியது. அமைப்பு ஏப்ரல் 2017 இல் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து பேலோட் திட்டங்களை நாடியது. இந்த நிலையில், தற்போது 2031க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.