பெங்களுர்:
ந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ 68 வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ ஆர்டர் பெற்றுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி நிலையம்  ஆகும்.  இதன் தலைமை அலுவலகம் பெங்களுருவில் உள்ளது. இஸ்ரோ 1969ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது.
pslv-c34takeoff-view4
தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் பணியாற்றுகின்றனர். இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்  இந்த விண்வெளி நிறுவனத்திற்கு கிரண்குமார் தற்போது தலைவராக உள்ளார்.
உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி நிலையம்  ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நவீன தொழில்நுட்ப முறையில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. இதையடுத்து இந்தியா தயாரிப்பு ஏவுகணை மூலம் வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்வி வருகிறது.
தற்போது 68 வெளிநாடு செயற்கைக் கோள்களை ஏவும் ஆர்டரை இஸ்ரோ பெற்றுள்ளது. அதில் 12 செயற்கைக் கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்ததாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை இஸ்ரோ நிறுவனத்தின் வணிகபிரிவான ஆண்டிரிக்ஸ் கர்ப்பரேஷனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராகேஷ் சசிபூஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரோ கடந்த 15 ஆண்டுகளில் பெல்ஜியம், இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் 74 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது. அந்த நம்பகத்தன்மையே இப்போது மேலும் பல ஆர்டர்கள் வந்து குவியக் காரணம் என்று அவர் உற்சகத்துடன் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், பல செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவும் லாபகரமான தொழில்நுட்பம் குறித்து இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் அரசு மற்றும் தனியார் சார்ந்த பல்வேறு துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு 2,500 செயற்கைக் கோள்களை உருவாக்கும் திட்டமிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரோவின் சமீபத்திய இந்த வளர்ச்சி பிரம்மாண்டமானது. ஆனாலும் எதிர்காலத்தில் ப்ளூஆர்ஜின், ஃபயர்ப்ளை சிஸ்டம்ஸ், ராக்கெட் லேப் மற்றும் ஸ்பேஸெக்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் கடும் போட்டியை இஸ்ரோ சந்திக்க வேண்டியுள்ளது.