டெல்லி
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்ற வி நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேந்த வி நாராயணனை மத்திய அர்சு நியமித்துள்ளது. ஏற்கனவே தமிழ்கத்தைச் சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக பதவி வகித்துள்ள நிலையில், வி நாராயணின் நியமனம் மூலம் மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராகிறார்
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிலையத் திட்டம், ககன்யான் திட்டம் என இந்தியாவின் விண்வெளித் துறை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு அடுத்ததாக அவர் பதவியேற்கவுள்ளார்.
முனைவர் நாராயணன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக இருந்து வருகிறார். சந்திரயான் 1, 2, 3, மங்கள்யான் திட்டம், ஆதித்யா எல்1, ககன்யான் திட்டம் ஆகிய முக்கியத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை அவர் செய்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற நாராயணன் இஸ்ரோ தலைவராக உயர்ந்துள்ளார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,
“தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்படித்து, இஸ்ரோவில் உதவியாளர் நிலையில் பணிக்குச் சேர்ந்து, இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். இதற்குப் பின்னால் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை,”
என்று பாராட்டியுள்ளார்.