ஜெருசலேம்: கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவருவதிலும், அந்த மருந்தை நாடெங்கிலும் எடுத்துச் செல்வதற்கும் அமெரிக்கா தடுமாறிக் கொண்டிருக்க, குட்டி நாடான இஸ்ரேலோ, தனது கொரோனா தடுப்பு மருந்து நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் தற்போது Pfizer-BioNTech தடுப்பு மருந்து நடைமுறையில் உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக, இஸ்ரேலில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் இருந்தது. நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், விரைவில் ஒரு சிறப்பான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில், அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தற்போது அந்த மருந்து நல்ல பலனளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தாண்டு மார்ச் முடிவதற்குள், அந்நாட்டின் அனைத்து வயது வந்தவர்களுக்கும் போடப்பட்டிருக்க வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆய்வின் மூலம் தெரியவருவது என்னவென்றால், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 12 லட்சம் பேரில், இந்த தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட 6 லட்சம் பேரில் 94% பேர், அறிகுறியுள்ள தொற்றைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவொரு ஆச்சர்யகரமான பயன்விளைவாக கருதப்படுகிறது.
இஸ்ரேலிய தடுப்பு மருந்து செலுத்தும் திட்டமானது, எந்தவித இடையூறும் இல்லாமல், சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்நாட்டில் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.