அமெரிக்காவின் கொலராடோவின் போல்டரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சம்பவம் நிகழ்ந்தது, பாலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பிக் கொண்டே ஒருவர் மக்கள் மீது பெட்ரோல் குண்டை வீசினார்.
இந்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்கள் நகரின் பரபரப்பான பேர்ல் தெரு நடைபாதை வணிக வளாகத்திற்கு அருகில் கூடினர். இந்த நேரத்தில், 45 வயதான முகமது சப்ரி சோலிமான், அரை நிர்வாண நிலையில், இரண்டு கைகளிலும் பெட்ரோல் குண்டை ஏந்தியபடி, ‘சுதந்திர பாலஸ்தீனம்’ போன்ற கோஷங்களை எழுப்பியபடி மக்களைத் தாக்கினார்.
சம்பவ இடத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை நிலவியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்தியவரை கைது செய்தனர்.
இந்த தாக்குதல் “பயங்கரவாதச் செயலுக்குச் சமம்” என்று FBI இயக்குநர் காஷ் படேல் கூறினார்.
சமீபத்தில், வாஷிங்டனில் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் இருவரை சுட்டுக் கொன்ற ஒருவர் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.