மும்பை
வாட்ஸ் அப் செயலி மூலம் பெகாசஸ் என்னும் வைரஸை பரப்பி இந்திய ஆர்வலர்களைக் கண்காணிக்க இஸ்ரேல் நாட்டு நிறுவனம் முயன்றது தெரிய வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையில் சுமார் 24க்கும் மேற்பட்ட இந்தியக் கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தலித் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் வாட்ஸ் அப் நிறுவனம் அவர்களது மொபைல்கள் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆர்வலருமான நிகல்சிங் ராதோட் மற்றொருவர் கலாசாரப் பெண் ஆர்வலர் ரூபாலி ஜாதவ் ஆகியோர் ஆவார்கள்.
கடந்த 7 ஆம் தேதி அன்று வாட்ஸ் அப் மூலம் ராதோடுக்கு ஒரு வெளிநாட்டு எண்ணில் இருந்து ஜான் ஸ்காட் ரயில்டன் என்பவரிடம் இருந்து செய்தி வந்துள்ளது. அவர் தன்னை கனடாவில் உள்ள டோரண்டோ பல்கலைக்கழகத்தின் சிடிசன் லாபரட்டரியின் மூத்த ஆய்வாளர் என அறிமுகம் செய்துக் கொண்டுள்ளார். தன்னைப் பற்றித் தெரிந்துக் கொள்ளக் கூகுள் மூலம் தேடிப் பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேடுதலின் மூலம் இந்த விவரங்களை உண்மை என ராதோட் அறிந்துக் கொண்டுள்ளார். ராதோட் பீமா கோரேகான் வழக்கில் மகாராஷ்டிர மாநில அரசுக்கு எதிராக வாதாடி வருகிறார். அவருக்கு அறிமுகமற்றவர்களிடம் இருந்து ஏதேனும் செய்தி அல்லது இ மெயில் வந்ததா என சிடிசன் லாப் கேட்டுள்ளது. அவர் தனக்கு வந்த ஒரு இ மெயில் குறித்துச் சொல்லி உள்ளார்.
இதைப் போல் கடந்த 28 ஆம் தேதி அன்று ரூபால் ஜாதவுக்கு ஜான் இதே போல தன்னை அறிமுகம் செய்துக் கொண்டுள்ளார். ரூபாலி கபிர் கலா மன்ச் ஐ சேர்ந்த கலாச்சார ஆர்வலர் ஆவார். அவரிடம் ஜான் இந்த வருடம் குறிப்பாக அவர் சந்தித்த சவாலான இணைய நிகழ்வைக் குறித்து விசாரித்துள்ளார்.
வாட்ஸ் அப் மூலம் தனது மொபைலில் வைரஸ் உள்ளதாகவும் அதற்காக அவர் மற்றொரு மொபைல் வாங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதைத் தெரிவித்த ஜாதவ் தாம் விருப்பமில்லாமல் புதிய மொபைல் வாக்கியதையும் தெரிவித்துள்ளார். தற்போது வெளி வந்த தகவலின்படி வாட்ஸ் அப் மற்றும் இ மெயில் மூலம் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என் எஸ் ஓ என்னும் உளவு நிறுவனம் ஒரு வைரஸை அனுப்பியது குறித்து இந்த விசாரணை நடந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நிறுவனத்தை எதிர்த்து வாட்ஸ் அப் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு மனுவில் பெகாசஸ் என்னும் வைரஸை மொபைலி பரப்பி அந்த மூலம் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை இந்நிறுவனம் கண்காணித்து வந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 1400 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Thanks : FIRST POST