இஸ்ரேல்:

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்யும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் பங்கேற்க வேண்டுமென, இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிக்கல் ஆராய்ச்சி அமைப்புக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிக்கல் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் சாமுவேல் ஷாபிரா, மேற்கொண்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை விலங்குகள் மீது பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான தகவலில், உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் பணிகளை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் இதை உறுதிபடுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

இதுகுறித்து ஐஐபிஆர் தலைமை அதிகாரி எரான் ஜஹாவி தெரிவிக்கையில், தனது முழு கவனத்தையும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் செலுத்தி வருவதாகவும், இதற்காக மூன்று குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் ஜெருசலம் வென்சர்ஸ் பார்ட்னர்ஸ் நடத்திய ஆன்லைன் ஆங்கில மொழி படிப்புக்கான மாநாட்டில் இவர் பேசிய போது, நாங்கள் கொரோனா தடுப்பூனி தயாரிக்கும் பணியில் மற்ற துறை நிபுணர்களுடன் ஒன்றினைந்து பணியாற்றி வருகிறோம் என்றார்,

தொடர்ந்து பேசிய அவர், இந்த பணிகள் நடந்து வரும் ஆய்வகத்தில் தொடர்ச்சியாக பணிகள் நடந்து வருவதாலும், இந்த தயாரிப்பு பணிகளில் ஆபத்து இருப்பதாலும், தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் மெதுவாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் நடந்து வருகிறது என்றார்.

இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அவிவ் கோஹாவி இருவருக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து இருவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து இவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வெளியாகின என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஐஐபிஆர் அமைப்பு தெரிவிக்கையில், விலங்குகள் மீது கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த நோய் விலங்குகளை பாதிக்காது என்பதால் விலங்குகளின் மீது பரிசோதனை மேற்கொள்ளபட்ட உள்ளது என்றும் அவர் கூறினார். ஆனாலும் இந்த சோதனை குறித்து அவர் விரிவாக தெரிவிக்கவில்லை.

ஆராய்ச்சிக்கு உதவக்கூடும் என்ற நம்பிக்கையில், புதிய கொரோனா வைரஸால் தொற்றுநோயிலிருந்து மீண்ட மக்களிடமிருந்து பிளாஸ்மா சேகரிப்பிலும் ஐ.ஐ.பி.ஆர் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேலில் 50 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இஸ்ரேல் வரும் பயணிகள் அனைவரும் 2 வாரங்கள் கட்டாய கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலிலிருந்து அண்டை நாடுகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த நாடு திரும்பி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.