ஜெருசலேம்

ஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை ஆட்சி அமைக்க அந்நாட்டு  அதிபர் ரியுவென் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழல் புகார் காரணமாகப் பெரும்பான்மை இழந்த இஸ்ரேல் நாட்டின் நேதன்யாகு அரசு கவிழ்ந்ததால் மறு தேர்தல் நடந்தது.   இந்த தேர்தலில் முன்னாள்  பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பென்னி கான்ட்ஸ் ஆகியோரின் கூட்டணி போட்டியிட்டன.   இவர்கள் இருவருக்குமே சம வாக்கு கிடைத்துள்ளதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.   அதையொட்டி தனது அரசியல் எதிரியான கான்ட்ஸ் உடன் கூட்டணி அமைக்க நேதன்யாகு முடிவு செய்தார்.

ஆனால் அதை கான்ட்ஸ் மறுத்துள்ளார்.  நேதன்யாகுவுக்கு பெரும்பான்மைக்கு 61  உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது அவர் பக்கம் 55 பேர் மட்டுமே உள்ளனர்.   அது மட்டுமின்றி  அவர் மீதான மூன்று ஊழல் வழக்குகளும் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.   ஏற்கனவே  பெரும்பான்மையைப் பெற முடியாமல் நேதன்யாகு அரசு கவிழ்ந்ததால் தற்போது அவர் பெரும்பான்மையை அடையப் பெரிதும் முயன்று வந்தார்.

தற்போது இஸ்ரேல் நாட்டு ஜனாதிபதி ரியுவென் ரிவ்லின் முன்னாள்  பிரதமர் நேதன்யாகுவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.    அத்துடன் இன்னும் 28 நாட்களில் நேதன்யாகு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.   அவ்வாறு நிரூபிக்க இயலாவிட்டால் மேலும் 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.