இஸ்ரேல் நாட்டின் கரையோர பகுதியான அஷ்கிலன் நகரின் மீது ஏவுகணை வீசப்படும் என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்தது.

எச்சரிக்கை விடப்பட்ட சில மணி நேரங்களில் அஷ்கிலன் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் படையினர் துவங்கினர்.

இதனால் அஷ்கிலன் மற்றும் காசா எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாக நீடித்துவரும் இந்த போரில் இதுவரை 1500 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

காசா பகுதியை இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்கு மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலஸ்தீனியர்களுக்குத் தேவையான உணவு மற்றும் உணவுப் பொருட்களை வழங்க ஐக்கிய அமீரக அரசு முன்வந்துள்ளது.