இஸ்ரேல்: ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டும் வகையில்,  இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்பேலாது தரைவழி தாக்குதலை நடத்தும் வகையில் இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.  மேலும் பல நூ
நூ ற்றுக்கணக்கானோரை ஹமாஸ்  அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் அதிரடி நடவடிக்கையை மேற்கண்டது. ஹமாஸ்  பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மோதல் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் சில நாடுகள் ஹமாசுக்கு ஆதரவாகவும், சில நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன.

இந்த போரில், இதுவரை  41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு  எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகிறது . அவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பின் உச்சபட்ச தலைவரும் அந்த அமைப்பின் பொதுசெயலாளருமான ஹசன் நஸ்ருல்லாவும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்தது.

இது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டுவரும் லெபனானின் எல்லையில் கிட்டதட்ட 15 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இதனால் 2005-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கவுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவரான நயிம் க்காசம் கூறியுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பில் சுமார் 50 ஆயிரம் வீரர்களும், 2 லட்சம் வரையிலான ராக்கெட்டுகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே முழு நீளப் போர் ஏற்பட்டால் அது காசாவில் ஏற்பட்டுள்ள சேதத்தை விட பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில்,   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, லெபனானில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன்மூலம் தரைவழி தாக்குதலை நடத்தும் வகையில் இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் நுழைந்துள்ள தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம், நேற்று இரவு லெபனானுக்கு நுழைந்தது. வடக்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள லெபனான் கிராமங்கள் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அவர்களைப் பயன்படுத்தி வடக்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

லெபனானில் தொடங்கப்பட்ட தரைப்படை நடவடிக்கைகள் துல்லியமான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. லெபனான் நாட்டில் உள்ள தௌதியா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 10 பேர் கொல்லப்பட்டனர்

தெற்கு லெபனான் நகரமான டவுடியாவில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசித் தாக்கியது, குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் டியாப் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என NNA தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வடக்கில் உள்ள இஸ்ரேலிய சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.