சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஐஎஸ்ஓ சான்றிதழை டிஜிபியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சி இன்று காலை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழகஅரசு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.