பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசாவை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது ஐதராபாத் அணி.

இந்த ஆட்டத்தில், பெரும்பாலும் ஐதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்தியது. அவர்களை முடிறியடிக்கும் வகையில், ஒடிசா அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

துவக்கத்தில் கிடைத்த சில கோல் வாய்ப்புகளை ஐதராபாத் ‍அணி தவறவிட்டாலும், ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அந்த அணியின் சந்தானா கோலாக்கி, தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஐதராபாத் முன்னிலைப் பெற்றிருக்க, இரண்டாவது பாதியில் ஒடிசாவிற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அதேசமயம், ஐதராபாத் அணியாலும் மேலும் கோலடிக்க முடியாமல் போகவே, முடிவில், 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது ஐதராபாத் அணி.

 

[youtube-feed feed=1]