ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் மாநிலத்தில்இந்திய ராணுவ நடவடிக்கைககள் மற்றும் முக்கிய இடங்களை புகைப்படம் மற்றும்  வீடியோ எடுத்து அனுப்பி வந்த 6 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ,அவர்கள்  பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூலம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த முயற்சி செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு அதிகாரிகள்,  கடந்த மே மாதம்  தோடா மாவட்டத்தைச் சேர்ந்த முஷ்தாக் அகமது மாலிக் (38), கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த நதீம் அக்தர் (24) ஆகியோர்  ஜம்முவில் உள்ள ரத்னுசாக் ராணுவ மையத்தைப் புகைப்படம் எடுத்த குற்றத்துக்காக  கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், அவர்கள்  பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடத்த தகவலை தொடர்ந்து, கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த சதாம் ஹுசைன், முகமது சலீம், முகமது ஷஃபி ஆகியோரர் மற்றும்  உதம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஃப்தார் அலி ஆகிய உளவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தனர்.

இவர்கள் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்ததும்,  மாநிலத்தில் பல இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த  முயற்சி மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பின் காஷ்மீர் பிரிவு அதிகாரியான இஃப்திகார் என்று அறியப்படும் நபருடன் கைது செய்யப்பட்டுள்ள உளவாளிகள் 6 பேரும் நேரடித் தொடர்பில் இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறினர்.