ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டின் துணைப் பிரதமராக இஷாக் டார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

பல்வேறு குழப்பங்களுக்கு இடையே பாகிஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.  பாகிஸ்தானின் 77 ஆண்டு கால வரலாற்றில் ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 24-வது பிரதமர் ஆவார்.

பாகிஸ்தானின் துணைப் பிரதமராக இஷாக் டார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஷபாஷ் ஷெரிப் அவரை துணை பிரதமராக நியமித்துள்ளார்.உடனடியாகத்  துணைப் பிரதமர் நியமனம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 73 வயதாகும் இஷாக் டார், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதி ஆவார். இஷாக் டார் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராகச் செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.