ல்லாகெலே

நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார்.

நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்றது. பல்லாகெலேவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், பாண்ட்யா இணை அணியைச் சரிவில் இருந்து மீட்டனர்.

இந்த இருவரும் அரைசதம் அடித்து அடித்தனர். இஷான் கிஷன் 82 ரன்னிலும், பாண்ட்யா 87 ரன்னிலும் அவுட் ஆகினர். இருவரது பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 266 ரன்கள் சேர்த்தது.  அடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் 82 ரன்கள் அடித்ததன் மூலம் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தோனியின் 15 வருட சாதனையை முறியடித்துள்ளார். ஆசியக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் 15 வருடச் சாதனையை இஷான் கிஷன் தகர்த்துள்ளார்.

இதுவரை கடந்த 2008ம் ஆண்டு தோனி 76 ரன்கள் எடுத்ததே சாதனையாக நீடித்தது. தற்போது   அந்த 15 வருட சாதனையை இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் விவரம்;

  1. இஷான்கிஷன் : 82 (2023)
  2. எம்எஸ்தோனி : 76 (2008)
  3. சுரிந்தர்கண்ணா : 56 (1984)
  4. எம்எஸ்தோனி : 56 (2010) ,