கோவை:
ஈஷா யோகா மையத்தில் உள்ள எனது இரண்டு பெண்களை மீட்டுத் தாருங்கள் இளம்பெண்ணின் தாயார் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்ததும், ஈஷா மையம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையை சேர்ந்தவர் காமராஜ். பேராசிரியர். இவரது மனைவி சத்யஜோதி. இவருக்கு 2 மகள்கள். இருவரும் பொறியியல் பட்டதாரிகள். இருவருரையும் ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டுத் தாருங்கள் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம், எனது மகள்களுக்கு ஏமாற்றி மொட்டையடித்து உள்ளார்கள். மொட்டையடித்தால், பெற்றோர் கல்யாணம் செய்ய வற்புறுத்த மாட்டார்கள் என்று சொல்லியும், அவர்களை இருவரையும் மூளைச்சலவை செய்து, அம்மா, அப்பாவிடம் கை சோறு இனி சாப்பிடப் போவதில்லை என்றும், ஈஷா யோகா மையத்திலேயே செத்துவிட்டால் மோட்சம் கிடைக்கும் என சொல்லி அவர்கள் மனதை மாற்றியிருக்கிறார்கள் அவர்களுக்கென தனி வசிய உணவுகள் கொடுத்து அவர்களை சாமியாரினி ஆக்கி உள்ளார்கள் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர்.
இதையடுத்து, ஈஷா யோகபா மையத்தில் தங்கி இருந்த, அவர்களது மகள்கள் இருவரும், தன்னிலை விளக்கம் அளித்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது.
வீடியோ இணைப்பு
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/08/ISHA-VIDEO.mp4[/KGVID]