
கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்
செல்வமணியின் வேண்டுகோளுக்கிணங்க ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ முன்னணி நடிகர்கள் முன்வந்து சுமார் 15 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.
இந்நிலையில் முன்னதாக, வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்துக்கு உதவ 10 லட்ச ரூபாய் அளித்திருந்தார். தற்போதைய வேண்டுகோளைத் தொடர்ந்து 600 மூட்டை அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி நடிகர்களுக்கு உதவக் கொடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் சூரியும் 500 கிலோ அரிசி வழங்கியுள்ளார். மேலும், நடிகர் விவேக் 3.5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
[youtube-feed feed=1]