விஜய்யின் ’மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறதா?
கொரோனா வைரஸ் உருவாகி இருக்காவிட்டால், விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி நூறாவது நாள் ‘போஸ்டர்’ இன்றைய தினம் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
நீளும் ஊரடங்கால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை.
எனவே ஷுட்டிங், எடிட்டிங், டப்பிங் மற்றும் சென்சார் முடிந்த படங்கள் ஓ.டி.டி. எனப்படும் இணைய தளங்களில் வெளியாகி வருகின்றன.
‘மாஸ்டர்’ படமும் ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆகலாம் எனப் பரபரப்பு தகவல் கோடம்பாக்கத்தில் பரவி உள்ளது.
’வா டீல்’ ‘அண்டாவ காணோம்’ ‘ மம்மி சேவ் மீ’’ ஆகிய தனது தயாரிப்புகளை, ஓ.டி.டி.யில் வெளியிட இருக்கும் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் ‘’ மாஸ்டர்’ படத்தை ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கேள்விப்பட்டேன்’’ என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால் ‘’ இதற்கு வாய்ப்பு இல்லை’’ என மற்றொரு தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் மறுத்துள்ளார்.
‘’இந்தி படங்களுக்கு உலகளாவிய சந்தை இருப்பதால், அவை ஓ.டி.டி.யில்,வெளியிடப்பட்டு காசு பார்க்கின்றன. ஆனால் பெரிய நடிகர்கள் நடித்த தமிழ் படங்களை ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இல்லை’’ என்று தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
-பா.பாரதி