சென்னை: தமிழக மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ள மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முறையான பிரிஸ்கிரிப்ஷன் இன்றி மருந்து விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு தனியார் மருந்தகங்களிலும், மருத்துவர் சீட்டு பெற்று மருந்துகள் வழங்குவது புழக்கத்தில் இல்லை. ஆனால், தமிழ்நாடு மாநில மருத்துவ இயக்குநரகம், மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் 1,100-க்கும் மேற்பட்டவைகள் செயல்பாட்டில் உள்ளன. இதன்மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இங்கு மருந்துகள் மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது ரூ.5ஆயிரம் மதிப்புள்ள மருந்துகள் ரூ.1000 முதல் ரூ.1200க்குள் கிடைக்கிறது. இதனால், பெரும்பாலான நோயாளிகள் மக்கள் மருந்தகத்தை நாடி வருகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு சார்பில், மாநிலம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருந்தகங்கள், நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இதன் செயல்பாடுகள்,தமிழ்நாடு மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணித்து வருகிறது. இந்த இயக்குனரகம், இதுவரை குறிப்பிடும் வகையில், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது திடீரென மக்கள் மருந்தகங்களில் ஆய்வு செய்து, விதிமீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது.
மேலும், இம் மருந்தகங்களில், மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்று இந்த குழுவினர், மத்தியஅரசின் மக்கள் மருந்தகங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது இதில், சில கடைகளில் முறையாக ஆவணங்களை பராமரிக்காமல் இருந்ததும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்றதும் கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. து.
இதுதொடர்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறும்போது, “மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்வது தவறானது. அதிலும், சில முக்கிய மருந்துகளை அவ்வாறு விற்பனை செய்வது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
விதிகளுக்கு புறம்பாக மருந்து விற்பனையில் ஈடுபட்ட 17 மக்கள் மருந்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 8 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மற்றவர்களின் விதிமீறல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது, மத்தியஅரசின் மக்கள் மருந்தகங்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விளக்கம்அளித்துள்ளதுடன், தரமான மருந்துகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் நோக்கம் ஆகும்.
பிரதமரின் மக்கள் மருந்தகம் மட்டுமல்ல, வரும் நாள்களில் முதல்வர் மருந்தகங்களிலும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மக்களிடைய மக்கள் மருந்தகங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், அதற்கு போட்டியாக திமுக அரசு முதல்வர் மருந்தகங்களை தொடங்கி உள்ள நிலையில், மக்களை மருந்தகங்களை முடக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு செயல்படுவதாக மருந்தாளுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.