டெல்லி

மிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவிக்காலம் நீட்டிகப்படலாம் என அதிகாரபுர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்ற்\ன.

கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். இதற்கு முன்பு நாகலாந்து ஆளுநராக இருந்த இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. என்வே இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் எழுந்தது.

தற்போது ஆளுநர் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபுர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு, புதிய ஆளுநர்கள் நிமயிக்கப்பட்டனர். அப்போது தமிழக ஆளுநர் தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆகவே ரவியே தமிழக ஆளுநராக தொடர்வார் எனக் கூறப்படுகிறது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாக திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது.  ஆளுநர் ரவி தமிழாஅரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல் திமுகவின் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்த்க்கதாகும்.