ரஜினியின் இஸ்லாமிய பாசத்துக்கு காரணம் இதுதானா?

முனீர் பீரன் அவர்களது முகநூல் பதிவு:

தன் மீது உள்ள பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் சாயங்களை துடைக்க முயற்சிக்கிறார் ரஜினி…

இதன் வெளிப்பாடே துபாயில் அவர் பேசியது..

ரஜினி அவர்கள் பேசுகையில்…
” என் வாழ்வில் நான் இந்த அளவுக்கு வந்ததற்க்கு மிகப்பெரிய காரணம் என் இஸ்லாமிய நண்பர்கள் தான்.

நான் கண்டக்டராக இருக்கும் போது எனக்கு பல உதவிகளை செய்தவர்கள் என் இஸ்லாமிய நண்பர்கள் தான். நான் இப்போது இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்.

ராகவேந்திரா மண்டபத்தின் இடத்தை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்.. அனைத்துக்கும் மேல என் குரு ராகவேந்திரா சுவாமி கோயில் அமைய மந்த்ராலயாவில் இடம் கொடுத்தவரும் ஒரு நவாப் தான்..

அதுக்கும் மேல நான் நடித்த படங்களிலேயே ஒரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும் என்றால் அது பாட்ஷா படம் தான். அதுவும் ஒரு இஸ்லாமியர் பெயர் தான்.

இப்படி பல வகையில் இஸ்லாம் என் வாழ்க்கையில் உள்ளது” என்று 2.O ஆடியோ விழா மேடையில் பேசினார் .

ரஜினியின் அரசியல் பிரவேசம் மற்றும் நிகழ்வு நடைபெறும் இடம் ஆகியன இதற்கான காரணம் என நான் நினைக்கிறேன்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Is this reason for Rajini's Islamic love?, ரஜினியின் இஸ்லாமிய பாசத்துக்கு காரணம் இதுதானா?
-=-