சென்னை: சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு 044-4567 4567 அல்லது1961 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம் மேலும் மாநகராட்சிகள் வழங்கப்பட்ட நம்ம சென்னை செயலி மூலம் புகார் அளிக்கலாம்  என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில்  கோடை வெயில் கொழுத்த தொடங்கி உள்ள நிலையில்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு மமளமளவென சரிந்து வருகிறது. சில இடங்களில் குடிநீர் பிரச்சினையும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் குடம் தண்ணீர் ரூ.15 முதல்  ரூ.20 வரை தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும்  பூண்டி ஏரி ,சோழவரம் ,புழல் ஏரி, கண்ணன் கோட்டை ,செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் 9 ,645 மில்லியன் கன அடி நீர் உள்ளது. மொத்தமாக 7000க்கும் மேற்பட்ட மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆனால் வீராணம் ஏரி வறண்டு வருகிறது. கடந்த வருடம் இதே நாளில் 8,263 மில்லியன் கன அடி நீர் இருந்தது. இந்த வருடம் 5 ,408 மில்லியன் கன அடி நீர் குறைவாக உள்ளது.

இதனால்  சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம்  சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.  .இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் பிரச்சனை இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்ததுடன்,    சென்னைக்கு 13.22 டிஎம்சி குடிநீர் கொள்ளளவு தேவை. ஆனால் தற்போது 15.560 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு இருப்பு உள்ளதாக கூறினார்.

இந்த நிலையில், சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டால் உடனே  பொதுமக்கள் 044-4567 4567 அல்லது 1961 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.  மேலும் மாநகராட்சிகள் வழங்கப்பட்ட நம்ம சென்னை செயலி மூலம் புகார் அளிக்கலாம் அல்லது மாநகராட்சி மூலம் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எங்களுக்கு உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை கொண்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த செயலில் சாலை, குடிநீர், கழிவுநீர், மின்சாரம் போன்ற, மக்களின் அன்றாடப் பயன்பாடுகள் சார்ந்த குறைபாடுகளை குறுந்தகவல்கள் மூலமாகவோ புகைப்படம் எடுத்தோ இச்செயலியில் பதிவு செய்தால் அக்குறைப்பாடுகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளால் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.