பாக்தாத்:
ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ஒரு புதைகுழிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தலையில்லா உடல்கள் புதைக்கப்பட்டது கண்டுபடிக்கப்பட்டுள்ளது.

இராக் நாட்டின் மொசூல் நகரின் தெற்கில் அமைந்திருக்கும் ஹமாம் அல்-அலில் நகரில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
“ஐ.எஸ். பயங்கரவாதிகள் செய்திருக்கும் மிக கொடிய குற்றத்திற்கு இது உதாரணம்” என்று ஈராக் ராணுவம் கூறியிருக்கிறது.
இது குறித்த முறையான தடவியல் புலனாய்வு இனிதான் துவங்க வேண்டும் என்றும் ஈராக் ராணுவம் தெரிவி்த்துள்ளது.
Patrikai.com official YouTube Channel