சென்னை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்குடன் தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொதுவிடங்களும் தற்போது வெறிச்சோடியுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையெனவும் மறு உத்தரவு வரும் வரை இத்தடை தொடரும் என சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் குடிமகன்கள் அதிகம் கூடும் மதுக்கடைகள் மட்டும் வழக்கமான உற்சாகத்துடன் இயங்கிவருகிறது. எனவே அக்கடைகளை மூடவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் மதுக்கடைகளை மூடாததேன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.