அதிகமான எடை காரணமா? இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது!

Must read

மஸ்கட்:
மன் நாட்டின் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சொந்தமான அந்த  சரக்கு கப்பல், ஷார்ஜாவில் இருந்து வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் என்ஜீன் ஆயில் போன்ற சரக்குகளை ஏற்றிகொண்டு ஏமன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கடலில் மூழ்கியதாக தெரிகிறது.

ஏமன் கடல்பரப்பில் கப்பல் வந்துகொண்டிருந்தபோது, திடீரென மூழ்க தொடங்கியதாக தகவல்கள் தெரிகிறது.  ஆனால் நன்றாக சென்று கொண்டிருந்த கப்பல் ஏமன் அருகே மூழ்க ஆரம்பித்தது ஏன் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. கப்பல் ஏதாவது ஏவுகனை போன்ற  ஆயுதங்கள் மூலம் தாக்கப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.   ஆனால், அதிகமான எடை காரணமாகவே கப்பல் மூழ்கியது என ஏமன் கடற்படை ◌தெரிவித்து உள்ளது.
கப்பலில் இருந்த மாலுமிகள் 11  பேரை ஏமன் கடலோர காவல்படையினர் போராடி  உயிருடன் மீட்டதாக கூறப்படுகிறது. எனினும், சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது. சேத விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

More articles

Latest article