மோடி அரசின் கறுப்பு பன ஒழிப்பு நடவடிக்கை ஒரு மோசடி என்று டெல்லி முதல்வரும் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்ச்சித்து வருகிறார். கறுப்புப் பணம் என்ற பெயரில் இந்த நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே, அந்த செய்தி பாஜக பிரமுகர்கள் பலருக்கு தெரிந்திருக்கிறது. அதன் எதிரொலியாக பல கோடி ரூபாய் பணத்தை அவர்கள் வங்கிகளில் அவசர அவசரமாக முதலீடு செய்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக சில சமூகவலைதளங்களில் ரிசர்வ் வங்கியின் இணையதள விபரங்களைக் காட்டி சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிந்திருக்கின்றன.
https://m.rbi.org.in/Scripts/BS_ViewBulletin.aspx என்ற ரிசர்வ் வங்கியின் இணையதளத்துக்கு சென்று 6. Money Stock Measures என்ற தொடுப்பை தொடருங்கள், வலது பக்கம் மேற்புறத்தில் உள்ள வருடம் மற்றும் மாதங்களுக்கான தெரிவுகளை அழுத்தி சோதித்துப் பாருங்கள்.
ரிசர்வ் வங்கி இணையதளம் சொல்லுகிறபடி செம்டம்பரில் மட்டும் ரூ.5 லட்சம் கோடி டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது முந்தைய மாதங்களிலோ சராசரியாக ரூ.50,000 கோடிகள்தான் டெப்பாசிட் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு காரணம் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் ஏற்ப்பட்ட ஏதேனும் கோளாறு அல்லது எழுத்துப்பிழை காரணமாக இவ்வளவு பெரிய தொகை அதில் காட்டப்படவேண்டும். அல்லது மோடி எடுக்கப்போகும் இந்த திடீர் நடவடிக்கை குறித்த செய்தி எப்படியோ கசிந்து கறுப்பு பண முதலைகள் முன்னெச்சரிக்கையாக தங்கள் பணத்தை வங்கியில் டெப்பாசிட் செய்து வைத்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் உலவுகின்றன.
சிலர் பென்ஷன்தாரர்களுக்கு மத்திய அரசு செட்டில் செய்ய வேண்டிய அரியர் பணம் என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் அரியர் பணம் வெறும் 34,600 கோடிதான். மிச்சமுள்ள 4,63,000 கோடி டெப்பாசிட் எங்கிருந்து வந்தது? என்ற இந்த கேள்வி சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.