சென்னை: பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும், அவரது அரசு இல்லம் என பல இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள், அடுத்து, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், தலைமைச் செயலக அதிகாரிகள், அங்குள்ள ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு போட்ட நிலையில், தலைமைச்செயலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆட்சியின்போது, அப்போதைய தலைமைச்செயலாளர் ராமமோகன்ராவ் மீதான குற்றசாட்டின்போது, தலைமைச்செயலகத்திற்குள் புகுந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், பின்னர் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறைக்குள் சென்றும் ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தலைமைச்செயலகத்தில் உள்ள ஐ.பெரியசாமியின் அறை அதிகாரிகளால் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. அத்துடன் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
இன்று காலை முதலே பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. அவரது சொந்த ஊரான திண்டுக்கல், மதுரை, சென்னை உள்பட பல இடங்களிலும், அவரது உறவினர்கள், மகன், மகளுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. மேலும், ஐபெரியசாமி சென்னையில் வசித்துவரும், அரசு பங்களாவான பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள ஐ. பெரியசாமியின் பங்களாவிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டில், முதல் தளத்தில் இருந்த இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதனை உடைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரின் சென்னை வீட்டின் முதல் தளத்தில் இருந்த இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்ததால், தபேதாரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு, அறைகளின் பூட்டை உடைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ததாகவும்,
மேலும், சட்டமன்ற உறுப்பினர் விடுதிகளில் உள்ள அமைச்சரின் அறையிலும் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது, அங்கு சாவி ஒன்று கிடைத்துள்ளதால், அது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது அது மட்டுமின்றி அடுத்த கட்டமாக தலைமைச் தலைமை செயலகத்தில் உள்ள ஐ. பெரியசாமியின் அறையை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை காரணமாக தலைமைச் செயலக அதிகாரிகள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் அலுவலகக் கதவை பூட்டிவிட்டுச் சென்றனர். மேலும் தலைமைச் செயலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.