காங்கிரஸ் உட்பட தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதை பெரும்பாலும் முடித்துவிட்டது திமுக. இனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய சில கட்சிகளுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கீடு முடிய வேண்டியுள்ளது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், சென்னையின் வேளச்சேரி மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்றபடி, இதுவரை வேறெந்த கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், சென்னை மாநகரின் எந்த தொகுதியும் இடம்பெறவில்லை.
மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பட்டியலிலும், சென்னையின் தொகுதிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.
எனவே, தமிழ்நாட்டின் தலைநகரை, கிட்டத்தட்ட முழுவதுமாக குறிவைத்து காய் நகர்த்துகிறதா திமுக? என்ற கவனம் எழுந்துள்ளது.