
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரம்யா தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் நடித்து வருகின்றார். பிரபலமடைந்த பிறகு இவர் தன் பெயரை திவ்யா ஸ்பந்தனா என மாற்றிக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஆனால் 2014 ஆம் ஆண்டு நடந்த மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இந்திய காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலுடன் நடிகை திவ்யா ஸ்பந்தனா காதல் ஏற்பட்டதென்றும். இவர்களது திருமணம் துபாயில் நடக்கக் போகிறதென்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவலகள் பரவி வருகின்றன .
Patrikai.com official YouTube Channel