மும்பை:
சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் எந்த மோதலும் இல்லை என ரெய்னா கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிகளில் விளையாடுவதற்காக, சென்னை அணி அண்மையில் துபாய் சென்றது. இந்நிலையில் சென்னை அணி வீரர் ரெய்னாவின் உறவினர்கள் மர்ம கும்பலால் தாக்கப்பட்டதால், அவர் அங்கிருந்து கிளம்பினார். இதனை தொடர்ந்து அணி நிர்வாகம் அவர் 2020 ஐபிஎல் போட்டிகளில் விளையாடப்போவதில்லை எனக் கூறியது. இதனிடையே அவருக்கும் தோனிக்கும் பிரச்னை எனவும் இதனால் ரெய்னாவின் மீது அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்ததே அவர் ஐபில் போட்டிகளில் விளையாடததற்கான காரணம் என தகவல் வெளியாகியது.
இநிந்லையில் ரெய்னா எனக்கும் தோனிக்கும் இடையே மோதல் இல்லை என கிரிக் பஸ் தளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில், இது ஒரு தனிப்பட்ட முடிவு, நான் எனது குடும்பத்திற்காக திரும்பி போக வேண்டியிருந்தது. சி.எஸ்.கே எனது குடும்பம் மற்றும் தோனி எனக்கு மிகவும் முக்கியமானவர், இது ஒரு கடினமான முடிவு. சி.எஸ்.கே மற்றும் எனக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. சரியான காரணம் இல்லாமல் யாரும் 12.5 கோடி ரூபாய் வேண்டாமென்று விட்டுச் செல்ல மாட்டார்கள். நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லில் அவர்களுக்காக விளையாடுவே எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்
[youtube-feed feed=1]