பெய்ஜிங்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான மருந்தை மனிதர்கள் மீது பரிசோதித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் சென்ற ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்டது. அங்குதான் சீனாவின் உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகம் உள்ளது. அங்கிருந்தே COVID-19 உருவாக்கப்பட்டு, உலகம் முழுதும் பரப்பப்பட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சீனாவில் 3000 க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி கொண்ட கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே கொரோனா தடுப்பு மருந்துகள், கருவிகள் உள்ளிட்டவற்றை சீனா பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.  ஆனால் அவை போதிய பலன் தரவில்லை.

இந்நிலையில் பெய்ஜிங்கை சேர்ந்த நாஸ்டாக் லிஸ்டெட் மற்றும் சினோவோக் பயோடெக் குழுவினர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதனை  மனிதர்களுக்கு பரிசோதித்து வருவதாக கூறப்படுகிறது.

உலகளவில் தற்போது அமெரிக்காவே கொரோனாவிற்கு அதிக உயிர்களை இழந்து வருகிறது.