மும்பை

சீனாவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கரோன வைரஸ் பாதிப்பு உள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளதால் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு  உட்படுத்தப்படுகின்றனர்.

முதன் முதலாக மத்திய சீன நகரமான வுஹான் நகரில் கரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டது.   கரோனா வைரஸ் சீனாவில் இருந்து தற்போது ஆசியாவின் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.   இந்த வைரஸ் கடந்த 2002-03 ஆம் வருடம் சீனா மற்றும் ஹாங்காங்கில் பரவி 650 பேரை பலி வாங்கிய சார்ஸ் வைரஸ் போலவே இதுவும் மக்களிடையே  பீதியை உண்டாக்கி உள்ளது.

இதையொட்டி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  இதில் சீனாவில் இருந்து மும்பை வந்த பயணிகளில் மூவருக்கு உடல் நலக் குறைவு இருந்ததால் அவர்கள் கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்த போதிலும் ஒருவருக்குப் பாதிப்பு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இதையொட்டி அவருக்கு மேலும் தீவிர பரிசோதனைகள் நடந்து வருகின்றன.   இதையொட்டி நாட்டின் பல பகுதிகளுக்கும் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தீவிரமாகப் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.