மெல்பெர்ன்
நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் காசநோய் மருந்துகள், கொரோனாத் தொற்றின் தீவிரத்தை குறைக்க உதவுமா எனும் நோக்கில் ஆய்வுகள் நடந்துவருகின்றன.
தற்போது உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டோரை கொண்ட நாடான அமெரிக்காவில் இது குறித்து ஆய்வுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. COVID – 19 க்கு தடுப்பு மருந்தையும், அதன் தீவிரத்தையும் குறைக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக செய்து வருகின்றன.
காசநோய் தடுப்பு மருந்து சிறுவயது முதலே பயன்பாட்டில் உள்ள நாடுகளான ஜப்பான் மற்றும் பிரேசிலில் கொரோனாத் தொற்று குறைவாகவும், காசநோய் தடுப்பு மருந்துகளை நடைமுறைப்படுத்தாத அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் நியூயார்க் தொழில்நுட்ப கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மெல்போர்ன் நகரில் உள்ள ஹெல்த்கேர் ஆய்வகம் கொரோனா தொற்றாளர்கள் சிலருக்கு காசநோய் தடுப்பு ஊசி செலுத்தி, COVID – 19 க்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.
உலக சுகாதார கழகம், கொரோனாத் தொற்று கண்டறியப்பட்ட சென்ற ஆண்டே நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க Bacillus Calmette Guerin எனப்படும் BCG காசநோய் மருந்தை பயன்படுத்துவது குறித்து யோசனை தெரிவித்திருந்தது. இது குறித்த மேலதிக ஆய்வுகளை மெல்பெர்னில் உள்ள தொற்றுநோய் எதிர் ஆய்வகமான Nigel Curtis மேற்கொள்ள வேண்டும் எனவும் WHO கேட்டுக்கொண்டுள்ளது.