சென்னை,

திமுக அணிகள் இணைய தம்மை அணுகினால் அதுகுறித்து பேசப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜெ.மறைவை தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனி அணியாக களமிறங்கினார். அதைத்தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்து நிற்கிறது.

இதையடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வமான சின்னமான இரட்டை இலையையும், அதிமுக பெயரையும்  தேர்தல் கமிஷன் முடக்கி உள்ளது.

இதுகுறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும் என்றார்.

மேலும்,, ‘2 அணிகளும் இணைவது பற்றி  இதுவரை யாரும் தங்களிடம் பேசவில்லை என்றும்,  . அது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை இன்று நடக்கிறது. அந்தச் சின்னம் எங்களுக்கே கிடைக்கும்’

இவ்வாறு கூறினார்.

அதிமுக பிளவுபட்டதை தொடர்ந்து  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அதில் சசிகலா அணியினிர் பணப்பட்டுவாடா செய்தது உறுதியானதை தொடர்ந்து தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், அதிமுக எம்.பி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், துணைவேந்தர் கீதாலட்சுமி உள்பட 30க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சசிகலா அணிகளுக்குள் மேலும் மோதல் ஏற்பட்டுள்ளது. மூத்த நிர்வாகிகள் பலர் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று, , இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க இடைத்தரகர் மூலம் டிடிவி தினகரன் பணம் கொடுக்க முயன்றதாக டில்லியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.