சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில்,  அதிமுக  கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில் ,இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையில், திமுகவின் கதவையும் தட்டியது.

இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துரைமுருகன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுகவில் ஏற்கனவே கூட்டணி, தொகுதி பங்கீடுகள் முடிந்து விட்டதாக நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.  இருந்தாலும், நேற்று தேமுதிக மூத்த நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் சென்று திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது.

இதை துரைமுருகனும், திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், எங்களிடம் கொடுக்க தொகுதிகள்  இல்லை என்று தெரிவித்தேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். துரைமுருகனிடம், தேமுதிகவினர் நடத்திய பேச்சு குறித்து  அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  தேமுதிகவிடம் கூட்டணி தொடர்பாக மீண்டும் பேசலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்படுவதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக   திமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இதற்கிடையில்,  மார்ச் 11ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.